மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில், பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.

அவர் பேசுகையில், “தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவை தான் எளிய வர்க்கத்தினர் அதிகமாகப் பயன்படுத்தும் போக்குவரத்து முறை. பெட்ரோல் விலை உயர்வினால் இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் மீதான வரியை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொள்ளாமல் ஒன்றிய அரசே பெருமளவு பயன் பெற்றதால் பெட்ரோலின் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், டீசல் உயர்தட்டு வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அதன் மீதான வரி குறைக்கப்படவில்லை என்றும் பெட்ரோல் மீதான வரி குறைப்பு இன்று (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அரசு செயலாளர் ஜோதி நிர்மல்சாமி வெளியிட்ட அறிவிப்பில், 13/14 ஆம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் மீதான வரி குறைப்பு அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

சனி 14 ஆக 2021