மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

டெல்டாவில் அக்ரோ இண்டஸ்ட்ரியல் காரிடார்: வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

டெல்டாவில் அக்ரோ இண்டஸ்ட்ரியல் காரிடார்: வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டமன்றத்தில் வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் இன்று (ஆகஸ்டு 14) தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2021-22 ஆம் நிதியாண்டில் வேளாண்மை மற்றும் சார்பு துறைகளுக்கென்று 34 ஆயிரத்து 220 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

நெல் விவசாயிகளின் நலனுக்காக நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண ரகத்துக்கு குவிண்டாலுக்கு 2015 ரூபாயும், சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு 2060 ரூபாயும் என உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுகிறது.

விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 4508. 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கோயமுத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை, ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கே இயற்கை வேளாண்மை தொடர்பான ஆய்வுப் பணிகளை வலுப்படுத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி பாதுகாத்து விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.

*தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க 12.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு, புதிதாக பத்து உழவர் சந்தைகளை உருவாக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை கிண்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும்.

முருங்கை அதிக அளவில் விளையும் தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படுகிறது. மதுரையில் முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க 2 கோடி ரூபாய்

காவேரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் வாழ்வு வளமாக திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு இடையிலான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடம் (அக்ரோ இண்டஸ்ட்ரியல் காரிடார்) அமைக்கப்படும்

போன்ற முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 14 ஆக 2021