மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

90% விசாரணை முடிந்தது: ஆறுமுகசாமி ஆணையம்!

90% விசாரணை முடிந்தது: ஆறுமுகசாமி ஆணையம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 11 முறை இந்த ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 11ஆவது முறையாக மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை ஆணையத்தின் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இவ்வழக்கில் 90 சதவிகித விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டது. 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆணையின் விசாரணைக்குத் தடை விதித்துள்ளதால் 2019ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 13 ஆக 2021