மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

நிதிச் சிக்கல் தீர 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும்: பட்ஜெட்டில் பி.டி.ஆர். அலாரம்!

நிதிச் சிக்கல் தீர 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும்: பட்ஜெட்டில் பி.டி.ஆர். அலாரம்!

தமிழ்நாட்டின் நிதி சிக்கலை தீர்க்க 2, 3 ஆண்டுகள் ஆகும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாக ராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆகஸ்டு 13) சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர், “இந்த பட்ஜெட் அடுத்த ஆறு மாதங்களுக்கானது. (ஏற்கனவே ஆறு மாத பட்ஜெட்டை கடந்த ஆட்சியில் தாக்கல் செய்துவிட்டனர்) 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ்நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. இந்த நிதிச் சிக்கலை தீர்க்க 2, 3 ஆண்டுகள் ஆகும். ஆனாலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்”என்று தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் துறை ரீதியாக இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:

.*அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்டுவோம்

*பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை

*தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ. 5கோடி ஒதுக்கீடு

*கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்

*அரசு இடங்களை அடையாளம் காண ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன ஆய்வு

*தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு

*தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 14,317 புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

*தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு

*நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு

*உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி நிதி ஒதுக்கீடு

* 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.

*மராமத்து பணிகளுக்காக ரூ.610 கோடி ஒதுக்கப்படும்

*நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு

*சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150கோடி

*ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு

உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 13 ஆக 2021