மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

வெளிநடப்பு ஏன்? எடப்பாடி பேட்டி!

வெளிநடப்பு ஏன்? எடப்பாடி பேட்டி!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்டு 13) நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின் திமுக அரசின் முதல் பட்ஜெட்டாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று அவரது அரசின் முதல் பட்ஜெட்டாகவும், தமிழ்நாட்டின் முதல்  காகிதமில்லா பட்ஜெட் ஆகவும் இன்று (ஆகஸ்டு 13) பட்ஜெட்  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் உரைக்காக இன்று காலை பத்து மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றம் கூடியது. நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய எழுந்திருக்கும்போதே... அதிமுக உறுப்பினர்கள் எழுந்து சில பிரச்சினைகளை வலியுறுத்தி பேச அனுமதிக்குமாறு குரல் எழுப்பினார்கள். ஆனால் சபாநாயகர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் உங்களுக்கு பிறகு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினார். இதை ஏற்காமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுதும் கலந்துகொண்ட அதிமுகவினர், “நாங்கள் திமுக போல கிடையாது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சபை நடவடிக்கைகளில் முழுதாக கலந்துகொண்டோம்” என்று கூறினார்கள். ஆனால் பட்ஜெட்டின் முதல் நாளிலேயே வெளிநடப்பு செய்துவிட்டனர்.

 வெளிநடப்புக்குப் பின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,

“சட்டமன்றத் தேர்தலில் 505 க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை சொன்னார் ஸ்டாலின். என் முதல் கையெழுத்து நீட் தேர்வை ஒழிக்கும் கையெழுத்து என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் மாணவர்களிடம் இந்த விடியாத அரசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை அறிக்கை என்று சொல்லி வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் நாங்கள் வெளியிட்டதை ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளார்கள். திட்ட நிதி முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்று தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான்.

2006-11 திமுக ஆட்சியில் டிவி அரிசி குடும்ப அட்டைகளுக்குத்தான் வழங்கப்பட்டது. அதைத்தான் அதிமுக அரசும் பின்பற்றியது. எனவே ஊதாரித்தனமாக செலவு செய்த முன்னாள் அரசு என்று நிதியமைச்சர் சொல்வது அவர்களது அரசையும் சேர்த்துதானா? நிதியமைச்சரைக் கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகளை கைது செய்வதைக் கண்டித்தும், பத்திரிகை சுதந்திரம் பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை பேசும் ஸ்டாலின் ஆட்சியில், நமது அம்மா பத்திரிகையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கிறது திமுக போலீஸ். அடுத்த நாள் பத்திரிகையை வெளியிட முடியாமல் இந்த ரெய்டு மூலம் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அரசைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வெள்ளி 13 ஆக 2021