மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

மீண்டும் செம்மொழி தமிழ் விருது!

மீண்டும் செம்மொழி தமிழ் விருது!

ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

கலைஞர் கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஆண்டுதோறும் இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்டவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களுக்கு கலைஞர் பிறந்தநாளன்று ரூ.10 லட்சம் விருது வழங்கப்பட்டு வந்தன. கடந்த 2010ஆண்டிலிருந்து பத்து ஆண்டுகளாக இந்த விருது வழங்கபடாமல் இருந்தது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி தமிழ் விருது(ரூ.10 லட்சம்) வழங்கப்படும். சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும்.

உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும். தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்” என்று பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாடு என்ற புதிய திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 13 ஆக 2021