மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்!

கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்!

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(ஆகஸ்ட் 13) தொடங்கி நடைபெற்று வருகிறது. காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளில் தமிழர்களின் பண்பாடு, நாகரீகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் சான்றுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தொல்லியல் நகரங்களான கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை போன்ற இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும். கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தமிழக காவல்துறைக்கு ரூ.8,930 கோடியும், தீயணைப்பு துறைக்கு ரூ.405.13 கோடியும், நீதித்துறைக்கு ரூ.1,713 கோடியும் மீனவர்கள் நலனுக்காக 1,149 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 13 ஆக 2021