மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு!

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு!

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்ட 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பள்ளிக் கல்வித் துறைக்கான திட்டங்கள் பின்வருமாறு:

அரசு பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதி செய்ய ரூ.114.18 கோடியில் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதி செய்ய ரூ.66.70 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படும்.

413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ரூ.13.22 கோடியில் வழங்கப்படும்.

மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து விலகி சிந்திக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்றல் செயல்பாட்டில் முதல் 3 இடங்களில் தமிழ்நாட்டை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைப்பாங்கான தொலைதூர பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும்.

2012ஆம் ஆண்டில் 76 சதவிகிதமாக இருந்த அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 53 ஆக குறைந்துள்ளது. இதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் கழிவறை, குடிநீர், ஆய்வகங்கள் முறையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்கல்வித் துறைக்கு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டகுழு அமைக்கப்படும்.

பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

865 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும்.

அதுபோன்று, உயர் கல்வி துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அமைக்கப்படும்” என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 13 ஆக 2021