மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

மாநிலங்களவையில் நடந்தது என்ன?: வெளியான வீடியோ!

மாநிலங்களவையில் நடந்தது என்ன?: வெளியான வீடியோ!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு இடையே நிகழ்ந்த தள்ளுமுள்ளு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் இரு அவைகளின் பணிகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. அதோடு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன் கூட்டியே முடிக்கப்பட்டது.

முன்னெப்போதும் காணாத நிகழ்வுகள் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் அரங்கேறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பெண் எம்.பி.க்கள் தாக்கப்பட்டனர் என்றும் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் குண்டர்கள் போல் செயல்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளைப் பேச விடாதது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

ஆனால் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுவது போல் நாடாளுமன்றத்தில் எதுவும் நடக்கவில்லை, எதிர்க்கட்சிகளின் தவறான செயல்பாடுகளை விசாரிக்கச் சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். சிசிடிவி காட்சிகளைப் பொதுவெளியில் வெளியிடுவதோடு, ஒழுக்கமின்றி நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நடப்பது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவை நடுவே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்புவது, பாதுகாவலர்கள் அவர்களைக் கட்டுப்படுத்த முயல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 2.5 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் ஒருவர் மேஜையில் ஏறுவது போன்றும் பதிவாகியுள்ளது.

முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நேற்று மாநிலங்களவையில் என்ன நடந்தது என்பது குறித்து குடியரசு துணைத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் அறிக்கை கொடுத்தனர்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வியாழன் 12 ஆக 2021