மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

வழக்குகளை எதிர்கொள்ள அதிமுக சட்டக்குழு!

வழக்குகளை எதிர்கொள்ள அதிமுக சட்டக்குழு!

அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள அக்கட்சி சார்பில் சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றும் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

“அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது, ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்கு புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கட்சி பணிகளிலும், மக்கள் பணிகளிலும், அல்லும் பகலும் அயராது ஈடுபட்டுவரும் கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதிமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுகவினரின் தூண்டுதலால், கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை, சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில் சட்ட ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது

முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், என்.தளவாய் சுந்தரம, சி.வி, சண்முகம், அதிமுக அமைப்புச் செயலாளர் பி.எஸ் மனோஜ் பாண்டியன், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், ஆர்.எம். பாபு முருகவேல் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 6 பேரும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளைப் பதிவு செய்யும்போது, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாகச் செய்வார்கள். எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரைத் தொடர்பு கொண்டு உரியத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 12 ஆக 2021