முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் பேரணி!

politics

நாடாளுமன்றம் முன்கூட்டியே முடிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் பேரணி சென்றன.

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை பணிகள் பாதிக்கப்பட்டன. ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13வரை 19 நாட்கள் நடைபெற இருந்த மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நேற்று (ஆகஸ்ட் 11) முடிக்கப்பட்டது.

இதனைக் கண்டித்து இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், திமுக, சிவசேனா உள்ளிட்ட 14 எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற பகுதியிலிருந்து விஜய் சவுக் வரை பேரணியாகச் சென்றனர். அப்போது, ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசுகையில், “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டது. அங்கு எங்களை பேச அனுமதிக்காததால், மீடியாக்கள் முன்பு பேசுகிறோம். நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காதது ஜனநாயக படுகொலை.

மழைக்கால கூட்டத்தொடர் நடக்கவில்லை என 60 சதவிகித மக்கள் கவலைப்படுகின்றனர். 60 சதவிகித மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவையில் உடல் ரீதியான தாக்குதல் நடந்தது” என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத் எம்.பி கூறுகையில், “ பெண் எம்.பி.க்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தனது 55 வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நிகழ்வை தான் பார்த்ததில்லை. பாகிஸ்தான் எல்லையில் நிற்பதைப் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, “உண்மையில் என்ன நடந்தது என சிசிடிவி கேமராவை ஆராய்ந்தால் தெரியவரும்” என்று குறிப்பிட்டார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *