r5000 காங்கிரஸ் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

politics

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களின் 5,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் சமூக ஊடக பிரிவு துறைத் தலைவர் மோகன் குப்தா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சிறுமியின் குடும்பத்தினருடன் பேசிய போட்டோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவது போக்சோ சட்டப்படி குற்றம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியது.

இதையடுத்து ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் சிலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மாணிக்கம் தாகூர் எம். பி, ராகுல்காந்தியின் உதவியாளர் கே.பி .பைஜு ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத் துறை தலைவர் மோகன் குப்தா கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு உட்பட எங்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என 5 ஆயிரம் பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் அழுத்தத்தால் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஒன்றிய அரசின் அழுத்தத்தால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது . ஏனெனில், தேசிய பட்டியலின சாதியினருக்கான ஆணையம் பகிர்ந்திருந்த இதே புகைப்படம் நீக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர்களை ஜெயிலில் அடைக்கும் போதே பயப்படவில்லை . ட்விட்டர் கணக்கை முடக்கினால் மட்டும் பயந்துவிடுவோமா.

நாங்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுப்பது குற்றமென்றால் இந்த குற்றத்தை நூறு முறை செய்வோம். தொடர்ந்து போராடுவோம். உண்மை எப்போதும் வெல்லும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *