மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

முதல்வர் ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

முதல்வர் ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆஜராகுமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது பொது மக்களின் மனநிலை குறித்தும், அப்போது மீன்வளத் துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரது கருத்து தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இருவரது சார்பிலும் தமிழக அரசு தரப்பில் இரண்டு அவதூறு வழக்குகள் கடந்த மார்ச் மாதம் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்த வழக்குகள் மீண்டும் நேற்று (ஆகஸ்ட் 11) நீதிபதி டி.சிவகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்குப் பிறப்பிக்கப்பட்ட சம்மன் வழங்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வியாழன் 12 ஆக 2021