மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

விரைவில் விரிவாக பேசுகிறேன்: ரெய்டு குறித்து வேலுமணி

விரைவில் விரிவாக பேசுகிறேன்: ரெய்டு குறித்து வேலுமணி

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து விரைவில் விரிவாக விளக்கமளிப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கிய வேலுமணியை மையமாகக் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை சுமார் 60 இடங்களில் நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்படுவதாக இருந்தது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். இதன் பின், வேலுமணி கைது முடிவு தள்ளிப் போடப்பட்டிருப்பதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில் வேலுமணி கைது முடிவு கடைசி நேரத்தில் மாறிய பின்னணி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்பிய நிலையில், இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் வேலுமணி எங்கே போனார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் தான் கோயிலுக்குச் சென்றதை உறுதி செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ”நேற்று மதியமே கோயிலுக்கு வருவதாக இருந்தது. நேற்று இரவு இங்குத் தங்குவதாக இருந்தது. ஆனால் சோதனையால் வரமுடியாமல் போனது. இந்த சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் பேட்டி கொடுத்திருக்கிறார். எனவே, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் ஆலோசனை நடத்திவிட்டு, லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்பாக விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாகப் பேசவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

-பிரியா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

புதன் 11 ஆக 2021