மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

பள்ளிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள்: அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள்: அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஓரிரு நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாக மருத்துவ வல்லுநர்களும் கல்வியாளர்களும் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் மருத்துவ நிபுணர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 50 சதவிகித மாணவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 11) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அப்போதைய சூழலைப் பொறுத்து பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளைத் திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். கடந்த ஆண்டே, இதுதொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவற்றில் கூடுதல் கட்டுப்பாடுகள் சேர்க்கப்படலாம்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி முதல் நாளில் 20 மாணவர்களும், மறுநாளில் மீதமுள்ள 20 மாணவர்கள் என வகுப்பிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அவர்கள் செய்யும் வேலைக்கு அழைத்து செல்வதாகத் தகவல்கள் வருகின்றன. இதுதொடர்பாக எங்கள் கவனத்துக்குத் தகவல் வந்தால் தொழிலாளர் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் இடைநிற்றலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 11 ஆக 2021