மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா!

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா!

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம், இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கி.பி. 1014 முதல் கி.பி. 1044 வரை அரசாண்ட மாமன்னர் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வர் ஆலயத்தை பிரம்மாண்டமாக கட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் இதுவரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்த தவறியதில்லை. இக்கோயிலை உலக புராதன பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இதனை கண்டுகளிக்க உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இத்தனை சிறப்புக்குரிய கோயிலை கட்டிய ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 11) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பிரகதீஸ்வர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் ராஜேந்திர சோழன் காலம் முதல் சோழர்களின் கலை, கட்டடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும் வாழும் வரலாறாகவும் விளங்குகிறது.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதி வாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாக கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை ஏற்று ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ள நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில், ”மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது மகிழ்ச்சி. அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் திரு.தேவந்திர பட்னாவிஸ் அவர்கள் தலைமையிலான அரசு அங்குள்ள துறைமுகத்திற்கு நம் தமிழ் மன்னரான ராஜேந்திரசோழனின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் உருவப்படத்தையும் திறந்து பெருமை சேர்த்துள்ளது. அதே போல மும்பையிலிருந்து லண்டன் செல்லும் ஒரு அரசு விமானத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயரும் சூட்டப்பட்டது என்பதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து பதிவிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 11 ஆக 2021