மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

வேலுமணி கைது முடிவு கடைசி நேரத்தில் மாறிய பின்னணி!

வேலுமணி கைது முடிவு கடைசி நேரத்தில் மாறிய பின்னணி!

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக நேற்று (ஆகஸ்டு 10) நடந்த ரெய்டுகளின் முடிவில் அவர் கைது செய்யப்படவே அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் நேற்று மாலை திடீரென வேலுமணி கைது முடிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கிய வேலுமணியை மையமாகக் கொண்ட 60 இடங்களில் நடந்த சோதனைகள் பற்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ் சுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.

வேலுமணிக்கு எதிரான புகார்களில் முகாந்திரமும், பூர்வ ஆதாரமும் இருப்பதாகவே விஜிலென்ஸ் அதிகாரிகள் கருதினார்கள். அதனால்தான் அவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் விஜிலென்ஸ் வட்டாரத்தில்.

அதாவது... கடந்த ஜூலை 27ஆம் தேதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், விஜயபாஸ்கர், வேலுமணி உட்பட ஐந்து நபர்களைக் குறிவைத்து சென்னை விஜிலென்ஸ் அலுவலகத்தில் மீட்டிங் நடத்தினார்கள், அந்தக் கூட்டத்தில் ஐந்து யூனிட் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களுக்கு முக்கியமான அசைன்மென்ட்களும் கொடுக்கப்பட்டது.

அதன்படி வேலுமணி மீதான வழக்குப் பதியும் பொறுப்பு விஜிலென்ஸிலேயே இருக்கும் SIC (SPECIAL INVESTIGATION CELL) சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் எஸ்.பியாக இருப்பவர் பண்டித் கங்காதரர் ஐபிஎஸ்தான் வேலுமணி விவகாரத்தை கவனிக்க பணிக்கப்பட்டார்.

இந்த எஸ்.ஐ.சி கங்காதாரர்தான் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்து நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி, காலையில் 52 இடங்கள், பின் கூடுதலாக 8 இடங்கள் என 60 இடங்களில் ரெய்டு நடந்ததற்கு பொறுப்பாளர்.

முக்கிய வழக்குகள், உடனடி கைதுக்கான சாத்தியம் கொண்ட வழக்குகளைதான் இதுபோல ஸ்பெஷல் இன்வஸ்டிகேஷன் செல்லிடம் ஒப்படைப்பார்கள். அந்த வகையில்தான் வேலுமணி ரெய்டு விவகாரம் எஸ்.ஐ.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் ரெய்டு முடிந்தவுடன் வேலுமணி கைது செய்யப்படுவார் என்பதுதான் விஜிலென்ஸ் வட்டாரத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

ரெய்டின் போது.அனைத்து இடத்திலும் பெருக்கி துடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் குடும்பத்தார்கள் வெளிநாட்டுக்குச் சென்றுவந்த துருப்பு சீட்டுகள் விஜிலென்ஸ் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களும் கிடைத்தன. ஆண்டுக்கு ஐந்து லட்சம் வருமானம் இல்லாத நபர்களிடம் ஐந்து கோடிக்கு மேல் சொத்து இருப்பதற்கான ஆவணங்களையும் விஜிலென்ஸ் திரட்டியுள்ளனர். இந்தப் பின்னணியில்தான் வேலுமணி கைது என்பதை விஜிலென்ஸ் வட்டாரம் எதிர்பார்த்துள்ளது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வேலுமணியை கைது செய்து எங்கே அழைத்துப் போவது என்றும், எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் கீழே இருக்கும் கூட்டத்தை அப்புறப்படுத்துவது குறித்தும் போலீசில் ஆலோசனைகள் போய்க்கொண்டிருந்தன.

நிலைமையை அறிந்த முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் இருவரும் ஆலோசனைகள் செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். இதன் பிறகே விஜிலென்ஸ் டி.எஸ்.பி. கந்தசாமி கோட்டைக்கு அழைக்கப்பட்டார். அவருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

“மாலை வரை வேலுமணி கைது என்ற நிலையை மாற்றியவர் ஓபிஎஸ்தான் என்று சொல்லுகிறார்கள். அவர்தான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசி வேலுமணியைக் கைது செய்யும் நடவடிக்கையை கைவிடச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். பல இடங்களில் முடிவுக்கு வந்த ரெய்டு வேலுமணி இருந்த எம்.எ..ஏ.ஹாஸ்டல் அறையில் மட்டும் முடியாமல் நீடித்துக் கொண்டிருந்தது. ஓபிஎஸ் மேற்கொண்ட சில முயற்சிகளால்தான் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அறை ரெய்டும் முடிவடைந்து அதிகாரிகள் வெளியே சென்றார்கள். வேலுமணியும் கைதாகாமல் வெளியே வந்தார்” என்று அதிமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

இதுகுறித்து விஜிலென்ஸ் வட்டாரத்தில் பேசியபோது, “வழக்கு பதிவுசெய்தாச்சு, ரெய்டும் செய்தாச்சு, இனிமேல் ஆதாரங்களை திரட்டி குற்றப் பத்திரிகையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். ஆறு மாதத்துக்குள் இதெல்லாம் முடிந்துவிடும்” என்கிறார்கள்.

நேற்று மாலை 7.00 மணிக்கு மேல் ஒபிஎஸ் இபிஎஸ் இருவரையும் சந்தித்து நன்றி சொன்ன வேலுமணி, 12 மணி நேரம் அறையில் நடந்த சம்பவங்களை எடுத்துச்சொல்லியுள்ளார்.

-வணங்காமுடி

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 11 ஆக 2021