மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

வேலுமணி எங்கே போனார்?

வேலுமணி எங்கே போனார்?

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த நிலையில், அவர் இன்று திருச்செந்தூர் சென்றுள்ளார்.

தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து நேற்று எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியதால் இன்று அவர், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றதாகத் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, “இந்த தகவல் உண்மை இல்லை” என்கிறார்கள்.

“இன்று காலை 7.40 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, கார் மூலமாகத் திருச்செந்தூர் அருகில் உள்ள நாடுநாலு மூலை கிணறு என்ற கிராமத்தில் அமைந்துள்ள சித்ரா லாட்ஜ் உரிமையாளருக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கே சில நண்பர்களிடம் சில முக்கிய விஷயங்களைப் பேசிவிட்டு மதியம் 2.40 மணி விமானத்தில் திரும்பவுள்ளார்” என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.

இதனிடையே வேலுமணி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ஆடி பூரம் நாளான இன்று (ஆகஸ்ட் 11) தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களைத் திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோயிலும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-வணங்காமுடி

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 11 ஆக 2021