மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

கண்ணீர் விட்ட வேலுமணி குடும்பத்துப் பெண்கள்!

கண்ணீர் விட்ட வேலுமணி குடும்பத்துப் பெண்கள்!

வேலுமணி, அவரது சகோதரர், வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் ஆகியோரையும் அவரது குடும்பத்தினரையும்தான் இந்த ரெய்டில் முக்கிய இலக்காக வைத்திருந்தார்கள் விஜிலென்ஸ் போலீஸார்.

ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றதுபோல் ஆறு முதல் பத்து போலீஸ் வரையில் ரெய்டில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு டீமிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டுபேர், கூட்டுறவு வங்கி அப்ரைசர் ஒருவர் ( வெள்ளி மற்றும் தங்கம் மதிப்பீடு செய்பவர்) என அழைத்துச் சென்றார்கள்.

கடலூர் டிஎஸ்பி மெல்வின் ராஜா சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சென்ற டீம் கோவையில் உள்ள வேலுமணி சகோதரர் அன்பரசன் வீட்டில் ரெய்டு செய்தனர். சென்னையில் உள்ள அன்பரசன் கம்பெனியில் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் ரெய்டு செய்தனர்.

கோவை வட்டாரத்தில் நடந்த ரெய்டு பற்றி விஜிலென்ஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ஒவ்வொரு ரெய்டின் போதும் எங்களுக்கு ஏற்படும் நெருடல் இதிலும் ஏற்பட்டது. எங்களை அறிமுகம் செய்துகொண்டு அதையடுத்து முதல் வேலையாக குடும்பத்தினர் அந்த நேரத்தில் அணிந்திருக்கும் நகைகளை கழற்றச் சொல்லி மதிப்பிட்டு அவர்களிடமே திரும்ப ஒப்படைப்போம். ஆண்களிடம் இது பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இந்த நகைகளை கழற்றச்சொல்லும்போது தயக்கம், துக்கம் என்று பல ரியாக்‌ஷன்களையும் வெளிப்படுத்தினார்கள். வேலுமணியின் வீட்டுப் பெண்களிடமும் இதேபோலை கை, கால், காது, மூக்கு என நகைகளை கழற்றச் சொன்னதும் மறுத்தார்கள். சிலர் கண்ணீர் வடித்துவிட்டார்கள். இல்லைம்மா.... இதைப் பாருங்க. நாங்க உங்கள் வீட்டுக்கு வரும்போது நீங்க எவ்வளவு நகை அணிந்துகொண்டிருந்தீர்கள் என்பதை கணக்கில் காட்ட வேண்டும். அதற்காகத்தான் இதைக் கேட்கிறோம். வேறு எதுவும் எங்களுக்கு நோக்கமில்லை. அதனால் கழற்றிக் கொடுங்கள், அதை மதிப்பிட்டுவிட்டு அப்படியே உங்கள் கண்முன்னே திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லியும் சில பெண்கள் அதை கேட்கவில்லை.

காதிலிருந்து மூக்கில் இருந்து நகைகளை எப்போதும் கழற்றவே மாட்டார்கள். அதை சென்டி மென்ட்டாக ஃபீல் செய்வார்கள். அதனால் முற்றிலும் மறுத்தார்கள். கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனபோதும் எங்களது டீமில் இருக்கும் பெண்கள் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி நகைகளை கழற்றி மதிப்பிட்டுவிட்டு மீண்டும் அவர்களிடமே திரும்ப ஒப்படைத்தார்கள்”என்று நம்மிடம் பகிர்ந்துகொண்டனர் விஜிலென்ஸ் வட்டாரத்தினர்.

இரவு வேலுமணி உடனடியாக தனது குடும்பத்தினருக்கு போன் பண்ணி என்ன நடந்தது என்று கேட்க பெண்கள் பலரும் இதைச் சொல்லி கண்கலங்கியிருக்கிறார்கள். வேலுமணி அவர்களுக்கு தைரியம் சொல்லியிருக்கிறார்.

-வணங்காமுடி

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 11 ஆக 2021