மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

ஒப்பந்ததாரர்கள் ஏகபோகமாக செயல்பட முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

ஒப்பந்ததாரர்கள் ஏகபோகமாக செயல்பட முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்கள் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்க இந்த ஆய்வு கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கினால் அதனை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயாராக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளைப் பொருத்தும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் 1651, புதுக்கோட்டையில் 700, தஞ்சாவூரில் 3571, திருவாரூரில் 926, நாகையில் 705, மயிலாடுதுறையில் 977 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுப்பணித் துறை சார்பில் கட்டடங்கள் கட்டும் போது, தண்ணீர், மணல், சிமெண்ட், கம்பி, கான்கிரீட் ஆகியவற்றின் தரத்தைப் பரிசோதனை செய்து அதன் ஆய்வறிக்கையை பணிக்காலத்தில் எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உயர் அலுவலர்கள் ஆய்வின் போது அதை அவர்களின் பார்வைக்குக் காண்பிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இருவழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாகவும், நான்கு வழி சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகம் விபத்து ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அங்குப் போக்குவரத்து காவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதனைச் சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திருச்சியில் உயர்நிலைப் பாலங்கள் அமைப்பது தொடர்பாக முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள 245 தரமற்ற பாலங்களை மேம்பாலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முடிக்கப்படாத உள்ள ரயில்வே பாலங்களை விரைவில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப் பணிகள் தாமதமாவதற்கு முக்கிய காரணம் நிலம் எடுப்பு.

இதனை தவிர்க்கும் வகையில், சாலைக்கான நிலமெடுப்பு, இழப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கெனத் தனியாக மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்படவுள்ளனர். 10,000 ஊராட்சி ஒன்றிய சாலைகளைத் தேர்ந்தெடுத்து தரமான சாலைகளாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியிலிருந்தது போல் ஒப்பந்ததாரர்கள் ஏகபோகமாக செயல்பட முடியாது. இந்த ஆட்சியைப் பொறுத்தவரை சாலை பணிக்கான ஒப்பந்தங்கள் பரவலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு பணிகள் நடைபெறும். திருச்சி, மதுரை, விழுப்புரம், சென்னை என இனி வட்ட அளவில் ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசி டெண்டர் விடப்படும்” என்று கூறினார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 10 ஆக 2021