மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

வேலுமணி ரெய்டு: ஸ்டாலின் -விஜிலென்ஸ் கந்தசாமி முக்கிய சந்திப்பு!

வேலுமணி ரெய்டு: ஸ்டாலின் -விஜிலென்ஸ் கந்தசாமி முக்கிய சந்திப்பு!

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள், வேலுமணி பதவிக் காலத்தில் உள்ளாட்சித் துறையில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் ஆகியோரைக் குறிவைத்து இன்று (ஆகஸ்டு 10) விஜிலென்ஸ் ரெய்டு நடத்தப்பட்டது.

காலை 6 மணிக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கிய ரெய்டு, பின் 60 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது. கோவை குனியமுத்தூரில் இருக்கும் வேலுமணியின் வீடு, வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீடு, சகோதரர் அன்பரசன் வீடு, சென்னையில் வேலுமணி வீடு உள்ளிட்ட பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் ஒவ்வொரு இடமாக சோதனை நிறைவுபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன.

இதற்கிடையில் இன்று மாலை விஜிலென்ஸ் டிஜிபியான கந்தசாமி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கிறார். விஜிலென்ஸ் ரெய்டு நடைபெற்று வந்த நேரத்தில் முதல்வருடன் விஜிலென்ஸ் டிஜிபி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காலை முதல் வேலுமணி தொடர்பான இடங்களில் நடந்த சோதனைகள் பற்றி முதல்வரிடம் கந்த சாமி விளக்கியதாகவும், அதன் அடிப்படையில் சில முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.பி. வேலுமணி கோவையில் இருக்கும்போது ரெய்டு நடத்தாமல் அவர் சென்னையில் இருக்கும் நேரமாகப் பார்த்து ரெய்டு நடந்திருப்பதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது என்கிறார்கள் விஜிலென்ஸ் வட்டாரத்தில்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 10 ஆக 2021