மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

வேலுமணி எடுத்த மாத்திரை- வெலவெலத்த விஜிலென்ஸ்!- பத்தாவது மாடியில் நடந்தது என்ன?

வேலுமணி எடுத்த மாத்திரை- வெலவெலத்த விஜிலென்ஸ்!-  பத்தாவது மாடியில் நடந்தது என்ன?

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (ஆகஸ்டு 10) ரெய்டு மேற்கொண்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை( விஜிலென்ஸ்) போலீஸார் காலை 7 மணி வாக்கில் சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் டி பிளாக் கட்டிடத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

கோவை வீட்டிலும், சென்னை வீட்டிலும் இல்லாத வேலுமணி தனது தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவிக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில்தான் தங்கியிருந்தார். ரெய்டு வருவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட வேலுமணி வீட்டில் இருப்பதை விட சபாநாயகரின் ஆளுகைக்கு உட்பட்ட எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருப்பது பெட்டர் என்று கருதியிருக்கிறார்.

ஆனாலும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குள் காலை சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் டி.எஸ்.பி. தலைமையில் சென்றிருக்கிறார்கள். அப்போதே வாசலில் ஒரு கூட்டம் திரண்டுவிட்டது. அரைமணி நேரத்தில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

பத்தாவது மாடியில் உள்ள அறையில்தான் வேலுமணி தங்கியிருக்கிறார். பத்தாவது மாடிக்கு செல்லும்போதே பத்தாம் மாடிக்கு யாரும் லிப்டில் வருவதையோ, பத்தாவது மாடியில் இருந்து யாரும் கீழே போவதையோ தடைசெய்துவிட்டனர். அந்த ஃப்ளோரில் மற்ற அறைகளில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்கள் கூட கொஞ்ச நேரத்துக்கு சிரமப்பட்டனர். காலை டிபன் வாங்குவதற்கு அவர்கள் வெளியில்தான் சென்றாக வேண்டுமென்பதால் அவர்களை மட்டும் செக் செய்து வெளியே சென்று வர அனுமதித்தனர். கீழே பெரும் கூட்டம் இருப்பதால் அவர்களில் யாரும் மேலே பத்தாவது மாடிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர் போலீஸார்.

வேலுமணியின் அறைக்கு சென்று செருப்பு, ஷூக்களை எல்லாம் வாசலிலேயே கழற்றிப் போட்டுவிட்டு அதிகாரிகள் உள்ளே சென்றனர். வேலுமணியிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு முதல் வேலையாக அவரது செல்போனை கைப்பற்றினார்கள். விஜிலென்ஸ் உள்ளே நுழைந்ததில் இருந்து வேலுமணியால் யாருக்கும் போன் செய்ய முடியவில்லை. அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை கூட விஜிலென்ஸ் அதிகாரிதான் அட்டெண்ட் செய்தார். சில போன்களுக்கு அதிகாரியே பதில் சொல்லி வைத்துவிட்டார். வேலுமணிக்கு வந்த இன்கமிங் நம்பர்களை எல்லாம் குறித்துக்கொண்டனர்.

அதன் பிறகு விசாரணையைத் தொடங்கினார்கள். சில மணி நேரத்தில் டிபன் போலீஸாரால் வரவழைக்கப்பட்டது. அதன் பின் பல்வேறு ஆவணங்களை வைத்து வேலுமணியிடம் விசாரணையைத் தொடர்ந்தனர் விஜிலென்ஸ் போலீஸார்.

ஒருகட்டத்தில் வேலுமணி சில மாத்திரைகளை உட்கொள்ளத் தயாரானார். அதிர்ந்து போன விஜிலென்ஸ் போலீஸார் என்ன மாத்திரை என்று விசாரித்துள்ளனர். தான் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைதான் என்று வேலுமணி விளக்கம் அளித்த பின்னரே போலீஸார் அதை உட்கொள்ள அனுமதித்ததாக விஜிலென்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்திருக்கிறது.

-வணங்காமுடி

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 10 ஆக 2021