மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

பிகாரை விட தமிழ்நாடு மோசம்: அடித்து நொறுக்கப்படும் பெருமிதங்கள்!

பிகாரை விட தமிழ்நாடு மோசம்: அடித்து நொறுக்கப்படும் பெருமிதங்கள்!

ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட்ட நிதி நிலை அறிக்கை குறித்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாடு பற்றிய பெருமிதங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

“மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், அதன் பிறகு பல மடங்கு அதிகரித்தது. ஆனால், இதுபற்றி அதிமுக அரசு தெரிவித்த கடன் கணக்கு சரியாக இல்லை.

தமிழ்நாட்டில் கடனுறுதி அளவு அதிகமுள்ள துறைகள் மின்சார வாரியமும், போக்குவரத்துத் துறையும்தான். மின்சார வாரியத்துக்கு 90 சதவிகிதக் கடனும், போக்குவரத்துத் துறைக்கு 5 சதவிகிதக் கடனும் உள்ளன. மின்சாரத் துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மின் வாரியத்தை விட பிகார் மின் வாரியம் நல்ல நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் துறை உற்பத்தி பிகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் என்பது 26.69 சதவிகிதமாக உள்ளது. 2008 - 09ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடியின்போதே 13.355 ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி கடந்த 2020 - 21இல் 8.7 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது . தமிழ்நாட்டில் இருக்கும் 69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நஷ்டத்தில் இயங்குகின்றன” என்று வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடன் அளவு கூடியபோதும் கடந்த ஆட்சிக் காலத்தில் நிதி நிர்வாகம் முறையாகவும், வெளிப்படையாகவும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 10 ஆக 2021