மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

வெள்ளை அறிக்கை: அதிமுக ரியாக்‌ஷன்!

வெள்ளை அறிக்கை: அதிமுக ரியாக்‌ஷன்!

தமிழக நிதியமைச்சர் இன்று (ஆகஸ்டு 9) தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அவர் வெள்ளை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் கொங்கணாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“மக்கள் நலத் திட்டங்களுக்காகவே கடன் வாங்கப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் கடன் வாங்கத்தான் வேண்டும். மின்கட்டணம் பல வருடங்களாக உயர்த்தவில்லை. மின்சாதனங்கள், நிலக்கரி பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் அந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. இதே போன்று டீசல் விலை உயர்ந்த போதிலும் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்த வில்லை. அதனால் அந்தத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எந்த அரசு வந்தாலும் இதனை தவிர்க்க முடியாது” என்றெல்லாம் கருத்து வெளியிட்டார்.

இந்நிலையில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ஜெயக்குமார்,

“வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் திமுக மக்களை திசை திருப்புகிறது. கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம். வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர். மக்களை வரிவிதிப்புக்கு தயார்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது”என்று கூறினார்.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

திங்கள் 9 ஆக 2021