மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

பழங்குடியினர் குறைகளுக்கு உடனடி தீர்வு : அமைச்சர்!

பழங்குடியினர் குறைகளுக்கு உடனடி தீர்வு : அமைச்சர்!

சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, பழங்குடியின மக்களுக்குக் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணைத் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த சேவை தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலக பழங்குடிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்குடிகளுக்கான உரிமைகள், வாழ்வாதாரம், மற்றும் அடிப்படைத் தேவைகளைக் காக்கும் நோக்கத்தோடு இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி ஆதிதிராவிடர் நல சங்கம் சார்பில் பழங்குடியினருக்கான இலவச உதவி எண் தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்த சேவை பழங்குடியினர் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் கயல்விழி, “18004251576 என்ற எண்ணை பயன்படுத்தி பழங்குடியின மக்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்தால் அவற்றை உடனடியாக முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று பழங்குடியின மக்களின் பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும்.

இந்தியாவிலேயே பழங்குடியின மக்களுக்கு முதன்முறையாகத் தமிழகத்தில் இலவச தொலைபேசி எண்ணை ஏற்படுத்தி கொடுத்த நீலகிரி ஆதிதிராவிடர் நல சங்கம் அமைப்புக்கு முதல்வர் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 9 ஆக 2021