மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ் தாஸ்

பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ் தாஸ்

பாலியல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது பாதுகாப்புப் பணிக்காகச் சென்றிருந்த அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜூலை 29 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதோடு இந்த வழக்கை டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ். பி.கண்ணன் இருவரும் நீதிபதி கோபிநாதன் முன்பு இன்று ஆஜரானார்கள்.

இருவரிடமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இவ்வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஒத்திவைத்தார்.

இன்றைய விசாரணையின் போது, குற்றப்பத்திரிக்கையியின் நகலை ராஜேஷ் தாஸ் பெற்றுக்கொண்டார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 9 ஆக 2021