மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

எந்த அரசு வந்தாலும் கடனை தவிர்க்க முடியாது: எடப்பாடி

எந்த அரசு வந்தாலும் கடனை தவிர்க்க முடியாது: எடப்பாடி

தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைப் போலவேதான் கடன் வாங்கியிருக்கிறது என்று தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆகஸ்டு 9) தமிழக நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி கொங்கணாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "ஒவ்வொரு ஆட்சியிலும் மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்கப்படுகிறது. இது எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் இருப்பதுதான். கொள்முதல் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்தபோதிலும் மக்களின் நலன்கருதி மின்கட்டணம், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததன் காரணமாகவே அரசின் கடன் உயர்ந்திருக்கிறது.

படிப்படியாக கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. பாதிக்கும் மேலாக மூலதனமாக உள்ளது.

மின்கட்டணம் பல வருடங்களாக உயர்த்தவில்லை. மின்சாதனங்கள், நிலக்கரி பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் அந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. இதே போன்று டீசல் விலை உயர்ந்த போதிலும் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்த வில்லை. அதனால் அந்தத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எந்த அரசு வந்தாலும் இதனை தவிர்க்க முடியாது"என்றார் எடப்பாடி.

மேலும், " ஏற்கனவே அதிமுக அரசில் போட்ட திட்டங்களுக்குத்தான் அடிக்கல் நாட்டி வருகிறார்கள். 100 நாள் திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றியதாக எனக்குத் தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் 100 நாளில் தீர்வு காணப்படும், உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பல முறை பிரசாரக் கூட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதனைத்தான் நாங்கள் கேட்கிறோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

திங்கள் 9 ஆக 2021