மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம்: முதல்வர் முயற்சி!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம்: முதல்வர் முயற்சி!

தமிழகத்தில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் பல லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க புதியத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என மக்கள் குறைகளை மனுவாகப் பெற்றார். அதில் பொதுப் பிரச்சனைகளைவிடத் தனிப்பட்ட தேவைகளுக்கான மனுக்கள்தான் அதிகமாக இடம் பெற்றிருந்தது. குறிப்பாக வேலை வாய்ப்புகள், கடன் உதவிகள், சொத்து பிரச்சனைகள், ஏன் கட்சியில் பொறுப்பு கேட்டும் பல மாவட்டங்களில் மனு கொடுத்தனர்.

மக்களின் மனுக்களைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கியமான மனுக்களுக்குத் தீர்வு காணப்படுகிறது.

இந்த மனுக்களில் முக்கியமாக இடம்பெற்றுள்ள பிரச்சினை இளைஞர்களுக்கு வேலையின்மை. இந்நிலையில் வேலையின்றி தவிக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் வகையில் இளைஞர் அணி செயலாளரும் எம்.எல்.ஏ,வுமான உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரிசன் ஆகியோருடன் ஆலோசனை செய்த முதல்வர் ஸ்டாலின், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்க வேலை வாய்ப்பு முகாம் நடத்தத் திட்டமிட்டார்.

முதற்கட்டமாக, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் (ஆகஸ்ட் 7) வேலை வாய்ப்பு முகாமை நடத்தினார் தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, நகர ஊரக வேலை வாய்ப்பு துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

அதில் சுமார் 5,000 இளைஞர்கள் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. 1500 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கொடுத்துள்ளார்கள்.

வேலை வாய்ப்பு முகாம் பற்றி அமைச்சர் கணேசனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “நாட்டில் பெரும் பிரச்சனையாக இருப்பது வேலையில்லாத திண்டாட்டம்தான். அதனைப் போக்க, முதல்வரும், இளைஞர் அணி செயலாளரும் தீவிரமான முயற்சியும் நடவடிக்கையும் எடுத்துவருகிறார்கள். அவர்களின் ஆலோசனைகள் படிதான் வேலை வாய்ப்பு முகாம் நடத்தினேன். நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்த கட்டமாக முதல்வர் தொகுதியான கொளத்தூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த சேவையை மாநிலம் முழுவதும் கொண்டுசெல்வதுதான் முதல்வரின் திட்டம். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன்” என்றார்.

-வணங்காமுடி

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 9 ஆக 2021