மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

விவசாயிகளுக்கு ரூ. 19,500 கோடி விடுவிக்கும் பிரதமர்!

விவசாயிகளுக்கு ரூ. 19,500 கோடி விடுவிக்கும் பிரதமர்!

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9) விடுவிக்கவுள்ளார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதியுதவி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாதம் 8ஆவது தவணையாக ரூ. 19,000 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12:30 மணிக்குக் காணொலிக் காட்சி வாயிலாக கிசான் நிதியை விடுவிக்கவுள்ளார் பிரதமர் மோடி. இதன்படி 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றவுள்ளார்.

கொரோனா காலத்தில் கிசான் திட்டத்தில் விடுவிக்கும் இந்த சிறு நிதியும் உதவிகரமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 9 ஆக 2021