மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

நவீனமயமாக்கப்படும் 58,000 பள்ளிகள்!

நவீனமயமாக்கப்படும் 58,000 பள்ளிகள்!

தமிழகத்தின் நிதி நிலைக்கு ஏற்ப அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீனமயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொடுமுடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அரசுப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 8) நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

மேலும் அவர், “மாணவ மாணவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து வரும் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார். தமிழகத்தில் உள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி நிலைக்கு ஏற்ப ஒன்றிய - மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீனமயமாக்கப்படும்.

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று நடைபெறும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டத்தில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

ஆசிரியர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் இடைநிற்றல் குறித்துக் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 9 ஆக 2021