மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

அவசர டெல்லி பயணம்: பாஜகவில் ராஜேந்திரபாலாஜி?

அவசர டெல்லி பயணம்: பாஜகவில் ராஜேந்திரபாலாஜி?

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜி நாளை (ஆகஸ்டு 9) டெல்லியில் பாஜகவில் சேர்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி மீது அவரது துறை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல சர்ச்சைகள் சூழ்ந்திருந்தன. அவரது நிர்வாகத்தில் ஆவின் நிறுவனத்தில் செய்யப்பட்ட நியமனங்களில் முறைகேடு இருப்பதாக கூறி அவற்றை ரத்து செய்வதாகவும் திமுக அரசு அறிவித்தது. இதற்கிடையில் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் வேகம் பிடித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவருக்கு பல தரப்பிலும் எதிரிகள் இருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை கொடுத்திருந்தது.

இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். நாளை (ஆகஸ்டு 9) காலை 11 மணியளவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேருகிறார்.

அதிமுகவில் இருந்தபோதே, ‘மோடி எங்கள் டாடி’என்பது உள்ளிட்ட பல்வேறு வைரல் பேச்சுகளுக்கு சொந்தக்காரர் ராஜேந்திரபாலாஜி. ஆவின் ஊழல் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படலாம் என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன.

இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி டெல்லி புறப்பட்டார். தனக்கு நெருக்கமான அதிமுக ஒன்றிய செயலாளர்களிடம், ‘சொத்துக் குவிப்பு வழக்குல அப்பீல் போயிருக்கோம்ல. அது விசயமா வக்கீலை பார்க்க டெல்லிக்கு போறேன்’ என்று சொல்லியிருக்கிறார். தன்னுடன் எப்போதும் இருக்கும் உதவியாளரிடம், ‘வட நாட்டுக் கோயிலுக்குப் போறேன்’என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவர் போனது பாஜகவில் சேர்வதற்குத்தான் என்று பாஜக வட்டாரங்களில் இருந்தே கூறுகிறார்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 8 ஆக 2021