மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

பாஜகவுக்கு எதிராக திமுக-அதிமுக இணைய வேண்டும்: வைரமுத்து

பாஜகவுக்கு எதிராக  திமுக-அதிமுக இணைய வேண்டும்:   வைரமுத்து

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

கலைஞரின் மூன்றாவது நினைவு தினமான நேற்று (ஆகஸ்டு 7) கலைஞரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய வைரமுத்து அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “ கலைஞர் நினைவிடத்தில் நின்று சொல்கிறேன். இந்த முக்கியமான செய்தியை தமிழ் தலைவர்களும்,உணர்வாளர்களும் குறித்துக் கொண்டால் மகிழ்ச்சி என்று நினைக்கிறேன். கலைஞருடன் ஒரு நெருக்கமான தனிமையில், நான் கேட்டேன். ‘எம்.ஜி.ஆர். கழகத்தை விட்டு வெளியே சென்றது உங்களுக்கு என்றைக்காவது வருத்தத்தை ஏற்படுத்தியதுண்டா?’என்று கேட்டேன்.

நீண்ட நேரம் யோசித்துவிட்டுச் சொன்னார், ’அது ஒரு வகையில் நல்லது. எம்.ஜி.ஆர். பிரிந்திருக்காவிட்டால் அந்த இடத்தில் திராவிடத்துக்கு விரோதமான சக்திகள் இருந்திருக்கக் கூடும். அதனால் அது ஒரு வகையில் நல்லது’என்று கலைஞர் என்னிடம் சொன்னார்.

அதே கருத்தை இன்று நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். திராவிட உணர்வாளர்களும், தமிழ் செம்மல்களும், தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற சித்தாந்தம் உடையவர்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இல்லையென்றால் எதிர் சக்திகள் எழுந்துவிடக் கூடும் என்று தமிழகம் நினைக்கிறது. ஆகவே எல்லா சக்திகளும், கலைஞரின் பெயரால், அண்ணாவின் பெயரால், ஒன்றுபடவேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழகத்தின் முதலமைச்சர் இந்த தத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல பொருத்தமானவராக வாய்த்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார் வைரமுத்து.

அதாவது தமிழகத்தில் பாஜக வளராமல் தடுப்பதற்காக திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து.

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

ஞாயிறு 8 ஆக 2021