மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

ராகுல் ட்விட்டர் கணக்கு நிறுத்தப்பட்டது ஏன்?

ராகுல் ட்விட்டர் கணக்கு நிறுத்தப்பட்டது ஏன்?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தலைநகர் டெல்லியின் நங்கல் பகுதியில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் பெற்றோரை ஆகஸ்ட் 4ஆம் தேதி சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோருடன் ஆறுதல் தெரிவிக்கும்போது எடுத்த புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “தலித் குடும்பத்தின் மகள் இந்த தேசத்தின் மகளும்கூட” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்று அனுப்பியது. அதில், “பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளத்தைப் புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்துவது போக்ஸோ சட்டத்தின்படி தவறானது. எனவே, அந்தப் பதிவை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ராகுலின் ட்விட்டர் பதிவை நீக்கியது ட்விட்டர் இந்தியா. அதோடு நேற்று அவரது ட்விட்டர் தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இந்தச்சூழலில் ராகுல் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. “ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மறுசீரமைப்பிற்குரியச் செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதுவரை, அவர் மற்ற சமூக வலைதளங்கள் வாயிலாக அனைவருடனும் தொடர்பில் இருப்பார். நமது மக்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாஜகவின் புகாரின் அடிப்படையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்துக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக, பாரதிய ஜனதா மற்றும் நரேந்திர மோடி அரசாங்கம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை உறுதி செய்ய, இந்த நேரத்தை பயன்படுத்தியிருந்தால், டெல்லி ஒரு பாதுகாப்பான இடமாக இருந்திருக்கும்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 8 ஆக 2021