மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

கலைஞர் ஓய்வு பெற்ற மூன்றாம் ஆண்டு தினம்!

கலைஞர் ஓய்வு பெற்ற மூன்றாம் ஆண்டு தினம்!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் கலைஞர் நினைவு தினத்தை அவரவர் வீடுகளிலேயே அனுசரிக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலைத் திருப்பிப் போட்ட, இந்திய தேசிய அரசியலில் ஒரு மாநில அரசியல்வாதியாக பெரும்பங்காற்றிய கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்டு 7).

கொரோனா பரவல் காரணமான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து... கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலும் கிராமங்களிலும் கலைஞர் படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கி நலத்திட்டங்கள் வழங்கச்சொல்லி அறிவுறுத்தியுள்ளது திமுக தலைமை.

அதுபோலவே இன்று காலை முதல் கலைஞரின் நினைவுகூரல்கள் தொடங்கிவிட்டன. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் கலைஞர் படத்தை வைத்து வணங்குங்கள், உங்கள் ஊர்களிலும் வீதிகளிலும் படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு அன்னதானம் செய்யுங்கள், படிக்கும் மாணவ மாணவிகளுக்குத் தேவையான உதவிசெய்யுங்கள் என்று முதல்வர் உத்தரவுக்கு இணங்க... திமுக எம்.எல்.ஏ,க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் கிளை செயலாளர் ஒன்றிய செயலாளர், நகரசெயலாளர் மற்றும் வார்டு செயலாளர்களை நேற்று ஆகஸ்ட் 6ஆம் தேதி அழைத்து, தேவையான உதவிகளை வழங்கியுள்ளார்கள்.

இன்று தமிழகமெங்கும் ஊரெங்கும் வீதிகள் முழுக்க கலைஞர் படங்களை வைத்து மலர்களால் அலங்கரித்து வைத்துள்ளனர். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இனிப்பு வழங்குவது, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ஆடிமாதம் என்பதால் ஊரில் உள்ள கோயில்களில் பக்தி பாடல்கள் ஒலித்துக்கொண்டும் கூழ் ஊற்றுவதுமாக இருக்கிறார்கள், அதே நேரத்தில் ஊரெங்கும் கலைஞர் புகழ் பாடல்கள் ஒலித்துவருகிறது.

-வணங்காமுடி

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

சனி 7 ஆக 2021