மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

சுதந்திர தின அணிவகுப்பு: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர தின அணிவகுப்பு: சென்னையில்  இன்று  போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையையொட்டி சென்னையில் இன்று (ஆகஸ்ட் 7) மற்றும் 9, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ல இன்று (ஆகஸ்ட் 7) மற்றும் 9 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னை கோட்டை பகுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கண்ட மூன்று நாட்களிலும் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அன்றைய தினங்களில் காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்தப் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். அதன்படி நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்க பாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்க சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக போக வேண்டும்.

அண்ணா சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஃப்.எஸ் சாலை வழியாக போகலாம். முத்துசாமி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம்.

மேற்கண்ட தகவல்கள் போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

சனி 7 ஆக 2021