மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

இந்தியாவுக்கு முதல் தங்கம்! ’ஈட்டி’ய நீரஜ் சோப்ரா

இந்தியாவுக்கு முதல் தங்கம்!  ’ஈட்டி’ய நீரஜ் சோப்ரா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவில் குடியரசுத் தலைவர் தொடங்கி அனைவரும் தங்க மகனை வாழ்த்தி வருகிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ராதான் இன்று (ஆகஸ்டு 7) தங்கம் வென்றிருக்கிறார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.

இன்று நடந்த இறுதிப்போட்டியில், நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர். ஆனபோதும் நீரஜின் ஈட்டியே முன்னேறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், 6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார்.

நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் பல தலைவர்கள் பாராட்டும் பரிசும் அளித்து வருகின்றனர்.

-வேந்தன்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

சனி 7 ஆக 2021