மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது: உதயநிதி

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது: உதயநிதி

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது பேரனும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, "பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது” என்று உருக்கமாகத் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று கலைஞரின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வான உதயநிதியும் கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் உதயநிதி.

இதில் உருக்கமான பதிவொன்றையும் தனது சுட்டுரையில் இட்டுள்ளார். “தன் போராட்ட பெருவாழ்வு மூலம் கோடான கோடி தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து,தன் அண்ணனின் பக்கத்தில் ஓய்வெடுக்கும் சமூகநீதி சூரியன் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் அவரின் 3ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று மலர்தூவி மரியாதை செய்தோம்.

இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டைப் பெற்றாலும், பாராட்டக் கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 7 ஆக 2021