மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

கலைஞர் பல்கலைக் கழகம்: திருமா கோரிக்கை!

கலைஞர் பல்கலைக் கழகம்: திருமா கோரிக்கை!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று (ஆகஸ்டு 7) பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நாளில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், " கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும்" என்று

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், "தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை.

உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழ்நாட்டில் பொருத்தமானதொரு இடத்தில், கலைஞரின் பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை ( Moscow State Linguistic University ) முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம்.

கலைஞரின் மூன்றாவது நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்"என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்

தொல்.திருமாவளவன்.

வேந்தன்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

சனி 7 ஆக 2021