மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

ஊரடங்கு கட்டுப்பாடுகள்: முதல்வர் ஆலோசனை!

ஊரடங்கு கட்டுப்பாடுகள்: முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 1,949ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று 1997ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கையாலும் தமிழகத்தில், மாவட்டம்தோறும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று உணவகங்கள் மாலை 5 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டன

தமிழகம் முழுவதும் கோயில்களில் ஆடி மாத பூஜை மற்றும் விழாக்களில் கலந்துகொள்ள பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், ஏற்கனவே உள்ள தரவுகளின்படி ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது இரண்டாம் அலையைப் போன்று நிலைமையை கைமீறிச் செல்லவிடாமல், மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாமா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 6 ஆக 2021