மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

ஒரு நாணயத்துக்கு மூன்று பக்கங்களா? அஜித்தின் புது விளக்கம்!

ஒரு நாணயத்துக்கு மூன்று பக்கங்களா? அஜித்தின் புது விளக்கம்!

நடிகர் அஜித் குமார் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து 30 வருடங்கள் ஆவதை ஒட்டி, அவரது அடுத்த படமான வலிமை படத்தின், ‘நாங்க வேற மாதிரி’ பாடல் வெளியிடப்பட்டது. இது சமூக தளங்களிலும் ரசிகர்களாலும் வலிமையாக கொண்டாடப்பட்டதையடுத்து, இன்று (ஆகஸ்டு 5) அஜித் குமார் தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாக ஓர் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், “ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், விமர்சகர்களின் விமர்சனங்கள் மற்றும் நடுநிலையாளர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழவிடு. அனைவருக்கும் அளவு கடந்த அன்பை வழங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வலிமை பற்றி கொண்டாட்டமான கருத்துகளும், விமர்சனங்களும் பகிரப்பட்ட நிலையில் அஜித் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் என்பதுதான் இயல்பு, இயற்கை. ஆனால் அஜீத்தோ ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள் என்று புது விளக்கம் கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த விளக்கமும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அஜித் ரசிகர்களோ, “எங்கள் தல சொன்னால் ஒரு நாணயத்துக்கு ஏழு பக்கங்கள் கூட இருக்கும்” என்கிறார்கள்.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வியாழன் 5 ஆக 2021