மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

முதல் வேளாண் பட்ஜெட்: முதல்வரே தாக்கல் செய்கிறார்!

முதல் வேளாண் பட்ஜெட்: முதல்வரே தாக்கல் செய்கிறார்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து முதன்முறையாக ஜூன் 21 ஆம் தேதி சட்டமன்றம் ஆளுநர் உரையோடு கூடியது. அப்போது ஆளுநர் உரையில், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளிலேயே, “விவசாயத்துக்கு தனி பட்ஜெட்”என்பது அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே ஆளுநர் தன் உரையில் இதை அறிவித்தார்.

இந்த நிலையில் அதை செயலாக்கும் வகையில் வரும் ஆகஸ்டு 14 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நேற்று (ஆகஸ்டு 4) வெளியிட்ட அறிவிப்பில், “இன்று அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆகஸ்டு 9 அன்று தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியியிடப்படும். ஆகஸ்டு 13 அன்று நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும். ஆகஸ்டு 14 ஆம் தேதியன்று வேளாண் நிதி நிலை அறிக்கை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்படும்” என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதன்படி தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. முதல் வேளாண் (விவசாய) பட்ஜெட் என்பதால் அதை முதல்வர் மு.க.ஸ்டாலினே தாக்கல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வியாழன் 5 ஆக 2021