மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

தமிழகத்தில் 1,120 போலீசார் இடமாற்றம்!

தமிழகத்தில் 1,120 போலீசார் இடமாற்றம்!

தமிழகத்தில் பணிமாறுதல் கேட்ட 1,120 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று டிஜிபி சைலேந்திர பாபு அடுத்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தமிழகத்தில், தலைமைக் காவலர்கள், இரண்டாம் மற்றும் முதல் நிலை காவலர்கள் மட்டும் 86,757 பேர், சிறப்புக் காவல் படை பிரிவில் 13,526 பேர் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.

காவல்துறையில் மண்டலம் விட்டு மண்டலம், சரகம் விட்டு சரகம், மாவட்டம் விட்டு மாவட்டம் பணிபுரியும் காவலர்கள் தங்களது சொந்த ஊர் அருகேவும், குடும்ப சூழ்நிலையின் காரணமாகச் சொந்த மாவட்டத்திலும், மருத்துவ காரணத்துக்காகச் சொந்த ஊரிலும் பணிபுரிய பணியிட மாற்றம் கேட்டு வந்தனர்.

இந்த கோரிக்கைகள் நீண்ட கால பரீசிலனையில் இருந்து வந்த நிலையில், டிபிஜி சைலேந்திர பாபு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், பணியிட மாறுதல் கேட்ட தகுதியுடைய 1,120 போலீசார் இடமாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீசார் கேட்ட மாவட்ட, மாநகர பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வியாழன் 5 ஆக 2021