மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

தஞ்சை ஆர்பாட்டம் தள்ளிவைப்பு: டிடிவி தினகரன்

தஞ்சை ஆர்பாட்டம் தள்ளிவைப்பு: டிடிவி தினகரன்

கர்நாடக அரசு காவிரியில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று ஜூலை மாதமே அறிவித்திருந்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். இப்போது இப்போராட்டத்தை தள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்டு 4) அமமுக தலைமைக் கழக அறிவிப்பில், "அமமுகவின் ஆர்பாட்டத்துக்கு கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிற காரணத்தை கூறி காவல்துறையினர் இன்று அனுமதி மறுத்துள்ளனர். ஜூலை 31 ஆம்தேதிக்குப் பிறகு இயல்பு நிலை உருவாகும் சூழல் இருந்ததால் அதை கருத்தில் கொண்டு இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

உலக சுகாதார நிறுவனம், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் புதிய எச்சரிக்கைகளை பொறுப்புள்ள அரசியல் கட்சியாக கருத்தில் கொண்டும், கழக உடன் பிறப்புகள், விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதியும் இப்போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்ற அக்கறையோடும் இந்த ஆர்பாட்டத்தை தள்ளி வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் மீண்டும் இதே போராட்டம் நடத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை ஆகஸ்டு 5 ஆம் தேதி பாஜக தஞ்சையில் நடத்த இருந்த ஆர்பாட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கலெக்டரே பொது இடங்களுக்கு சென்று மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறி வந்தார். இந்நிலையில்தான் பொது போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 4 ஆக 2021