மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

கோயில் இடங்களில் கல்வி நிலையங்கள்!

கோயில் இடங்களில் கல்வி நிலையங்கள்!

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வர் உத்தரவின் பேரில் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுவது பற்றியும், கோயில்களில் ஆய்வு மேற்கொள்வது பற்றியும் கூறினார்.

மேலும் அவர், “அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற விளம்பரப் பலகையை வெளியிட்ட நிகழ்ச்சியின் போது, தமிழகத்தில் அதிக கல்லூரிகளைக் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன்படி தமிழகம் முழுவதும் நிறையக் கல்லூரிகளைக் கொண்டுவர உள்ளோம். ஆக்கிரமிக்கப்பட்டு மீட்கப்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணாமல் போன சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலைகளை கடத்தும் நபர்களைக் கைது செய்து வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்த 6 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடுபோன சிலைகளை மீட்கும் பணியில் அறநிலையத் துறை தீவிரம் காட்டி வருகிறது” என்றார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 4 ஆக 2021