மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

ஆகஸ்டு 15 கிராம சபை: கமலைத் தொடர்ந்து வலியுறுத்தும் ஈஸ்வரன்

ஆகஸ்டு 15 கிராம சபை: கமலைத் தொடர்ந்து  வலியுறுத்தும் ஈஸ்வரன்

அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி கிராம சபை கூட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக

நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கிராம சபைக் கூட்டங்களை வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கோவை கலெக்டர் சமீரனிடம் ஆகஸ்டு 2 ஆம் தேதி மனு கொடுத்தார்.

இந்த நிலையில் ஆளும் திமுக கூட்டணியில் இருந்தும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் இது தொடர்பாக இன்று (ஆகஸ்டு 4) தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

“கடந்த ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் பொதுமக்கள் இருந்ததும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணமாக அப்போது பலராலும் பேசப்பட்டது.

கிராம சபை கூட்டமென்பது கிராம பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை நிவர்த்தி செய்வதாகும். கிராம பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்க கூடியதும் கிராம சபை கூட்டம் தான். அதேபோல கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களால் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு தனி ஒரு அதிகாரம் இருக்கிறது. தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெறாத காரணத்தால் கிராம பகுதிகளின் வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது.

பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே கிடப்பில் இருக்கிறது. கொரோனா பரவலின் 3-ஆம் அலைக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபை கூட்டத்தின் வாயிலாக கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த முடியும். தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளையும் கிராம சபை கூட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்துதரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும். எனவே தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின் படி ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை கூட்டத்தை நடத்திட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரன்.

தேர்தலுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த முயன்று அதன் பெயரால் பிரச்சினை ஏற்பட்டதால் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தினார். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தபின் கிராம சபைக் கூட்டம் நடத்த முதல் சந்தர்ப்பம் ஆகஸ்டு 15 ஆம் தேதி வர இருப்பதால், கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்து இதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 4 ஆக 2021