மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

வாரணாசியில் இருந்து தமிழகத்துக்குப் புதிய வருமான வரி தலைமை இயக்குநர்!

வாரணாசியில் இருந்து  தமிழகத்துக்குப் புதிய வருமான வரி தலைமை இயக்குநர்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி தலைமை இயக்குநராக (புலனாய்வு) சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி உயர்வு பெற்று, வாரணாசியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்துள்ளார்.

சுனில், 1988 இந்திய வருவாய் பணி அலுவலர்கள் அணியைச் சேர்ந்தவர். இவர் குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமானவரித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் உயர்பதவி வகித்துள்ளார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 2014-15ஆம் ஆண்டில் தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் லி குவான் யு பொதுக் கொள்கை பள்ளியில் பொது நிர்வாகத்தில் ஓராண்டு முதுநிலைப் படிப்பை முடித்துள்ளார். இந்தத் தகவலை சென்னை வருமானவரித் துறையின் கூடுதல் இயக்குநர் (புலனாய்வு) டி.ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெருமளவிலான ரெய்டுகளை நடத்தியவர் சுனில் மாத்தூர் என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் மாத்தூரின் நியமனம் அதிகார வட்டாரங்களில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 4 ஆக 2021