மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

ஈபிஎஸ், ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

ஈபிஎஸ், ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்குக் காரணம் அதிமுகதான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்து, கடந்த ஜூன் 13ஆம் தேதி பேசிய அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி, “ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்பதும் தேர்தல் முடிவுக்குப் பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவுக்கு வாடிக்கையாகிவிட்டது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தாலும் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கழகத்தின் அடிப்படை பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ஈபிஎஸ் ஓபிஎஸ் கடந்த ஜூன் 14ஆம் தேதி அறிவித்தனர்.

இது தமது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளது. எனவே, அதிமுகவை நிர்வகிக்கின்ற ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 3) நீதிபதி ஆலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக எடப்பாடி பழனிசாமி மற்றும் இரண்டாவது நபராகப் பன்னீர்செல்வம் இணைக்கப்பட்டனர்.

அதன்படி இருவரும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 4 ஆக 2021