மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

பெருமை பேசாமல் மீனவர்களைக் காப்பாற்றுங்கள்: ஆளூர் ஷா நவாஸ்

பெருமை பேசாமல் மீனவர்களைக் காப்பாற்றுங்கள்: ஆளூர் ஷா நவாஸ்

வீண் பெருமை பேசாமல் மீனவர்களைக் காப்பாற்றுமாறு பிரதமரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்த வேண்டும் என்று ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 28ஆம் தேதி அன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் அவர்கள் கோடியக்கரை அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கலைசெல்வன் என்பவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ ட்விட்டரில், "மோடி ஆட்சியில் ஒரு மீனவர் மீது கூட இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். தற்போது நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூட்டுக்கு அவர் என்ன பதில் சொல்வார்? எனவே, பெருமை பேசாமல், மீனவர்களைக் காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும்.

மேலும், நமது மீனவர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று, நாகப்பட்டினம் மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித் தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

செவ்வாய் 3 ஆக 2021