மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

தமிழ்நாட்டை பிரிக்கப் போகிறோமா? மக்களவையில் ஒன்றிய அரசு பதில்!

தமிழ்நாட்டை பிரிக்கப் போகிறோமா? மக்களவையில் ஒன்றிய அரசு பதில்!

தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய அமைச்சராக ஜூலை மாதம் முதல் வாரத்தில் பொறுப்பேற்றபோது, அவரது அமைச்சர் சுய விவரக் குறிப்பில் கொங்குநாடு தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே பாஜக தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்கப் போகிறது என்று தகவல்கள் பரவின. பாஜக பிரமுகர்கள் பலரும் இதை ஆதரித்துப் பேசினார்கள். கோவை உள்ளிட்ட சில மாவட்ட பாஜக அமைப்புகளில் கொங்குநாடு தனி மாநிலம் கேட்டு தீர்மானமும் இயற்றப்பட்டன.

ஆனால் ஒன்றிய அமைச்சர் முருகன், ‘கொங்குநாடு என்று எனது சுயவிவரக் குறிப்பில் இடம்பெற்றது கிளரிகல் மிஸ்டேக்’என்று கூறிவிட்டார். புதிய பாஜக தலைவர் அண்ணாமலையும், “அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று கூறினார்.

இந்த நிலையில் மக்களவையில் தமிழக எம்,பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் இதுகுறித்து இன்று (ஆகஸ்டு 3) எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பினார்கள்.

“இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையாவது பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இருக்கிறதா? அதுகுறித்த கோரிக்கைகள் அரசுக்கு வந்திருக்கிறதா?”என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதிலளிக்கையில்,

“புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகளும், தீர்மான மனுக்களும் பல்வேறு தனி நபர்கள் அமைப்புகளிடமிருந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு புதிய மாநிலம் உருவாக்குதல் என்பது விரிவான பாதிப்புகளையும், கூட்டாட்சி அமைப்பின் மீதான நேரடி தாக்கங்கள் ஏற்படுத்தும்.

எனவே புதிய மாநிலங்களை உருவாக்குவது என்றால் அது தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது அதுபோன்ற எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை”என்று கூறியிருக்கிறார்.

எனவே கொங்குநாடு உள்ளிட்ட எந்த மாநிலப் பிரிவினைக்கும் இப்போது சாத்தியம் இல்லை என்பதே ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதில் மூலம் தெளிவாகிறது.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

செவ்வாய் 3 ஆக 2021