மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

பாலியல் வழக்கு: ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு!

பாலியல் வழக்கு: ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு!

பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் சென்றபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பிக்கு, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இவ்வழக்கு நேற்று (ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து வரும் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான அறிக்கையை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. ஆக இருந்த கண்ணன் இருவரையும் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 29ஆம் தேதி விழுப்புரம் சிபிசிஐடியின் கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார், ராஜேஷ் தாஸ் மீது 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 3 ஆக 2021